search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டாஸ்மாக் ஊழியர்கள்"

    15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு டாஸ்மாக் தொழிலாளர் முன்னேற்ற சங்க மாவட்ட செயலாளர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். கூட்டு நடவடிக்கை குழுவின் பிரதிநிதிகள் வெங்கடேசன், செல்வராசு, ரத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவையின் மாநில செயலாளர் சவுந்தரராசன் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அனைத்து டாஸ்மாக் ஊழியர்களுக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டும், சீருடை, பணிப் பதிவேடு, சம்பள ரசீது போன்றவை வழங்கிட வேண்டும். டாஸ்மாக் ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினரின் மருத்துவ சிகிச்சைக்கு ஈட்டுறுதி திட்டத்தில் இணைத்திட வேண்டும். ஓய்வு பெறும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு சிறப்பு பண முடிப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவினர் பலர் கலந்து கொண்டனர். 
    சட்டசபையில் இன்று பேசிய அமைச்சர் தங்கமணி, டாஸ்மாக் ஊழியர்களுக்கான சம்பள உயர்வு விவரங்களை அறிவித்தார். #TasmacSalaryHike #TNassembly
    சென்னை:

    தமிழக சட்டசபையில் இன்று மானியக் கோரிக்கை விவாதத்தில் பங்கேற்று அமைச்சர் தங்கமணி பேசியதாவது:-

    110-வது விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளில் 83 அறிவிப்புகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 104 அறிவிப்புகளுக்கான பணிகள் நடக்கின்றன.



    தமிழக அரசின் கொள்கை பூரண மதுவிலக்கு என்பதுதான். தற்போது 3,866 மதுக்கடைகள் உள்ளன. படிப்படியாக பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும்.

    டாஸ்மாக் மேற்பார்வையாளர்களுக்கு ரூ.750  சம்பள உயர்வு அளிக்கப்படும். டாஸ்மாக் விற்பனையாளர்களுக்கு ரூ.600, உதவி விற்பனையாளர்களுக்கு ரூ.500 என்ற விகிதத்தில் சம்பள உயர்வு வழங்கப்படும்.

    தமிழகத்தில் ஆன்-லைன் மூலம் விண்ணப்பித்து மின் இணைப்பை பெறும் நிலை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. ஒரே நாளில் 3 லட்சம் மின் இணைப்புகள் வழங்கி சாதனை படைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார். #TasmacSalaryHike #TNassembly

    டாஸ்மாக் மதுக்கடை ஊழியர்கள் 29-ந்தேதி 1 நாள் கடையடைப்பு போராட்டம் நடத்தப் போவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். #TASMAC

    சென்னை:

    தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்க சிறப்புத் தலைவர் கு.பாலசுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    டாஸ்மாக் மதுக்கடையில் பணிபுரியும் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் இன்னும் தொகுப்பு ஊதியம்தான் பெறுகிறார்கள். 2 ஆண்டுகளில் 480 நாட்கள் பணியாற்றினால் அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இது அரசு விதியாகும். ஆனால் 13 வருடமாக வேலை பார்த்தும் இன்னும் பணி நிரந்தரம் செய்யப்படாமல் உள்ளனர்.

    இது மட்டுமல்ல, கால முறை ஊதியம், அரசு துறைகளில் மாற்றுப் பணி உள்பட 30 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி டாஸ்மாக் பணியாளர்கள் 29-ந்தேதி (செவ்வாய்) 1 நாள் கடையடைப்பு தமிழகம் தழுவிய வேலை நிறுத்த போராட்டம் நடத்த உள்ளனர்.


    இதற்காக சங்கத்தின் சார்பில் மாநிலம் முழுவதும் பிரசார இயக்கம் மேற் கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்த சூழ்நிலையில் வருகிற 28-ந்தேதி பேச்சு வார்த்தைக்கு வருமாறு டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் அழைப்பு விடுத்துள்ளார். இதை ஏற்று மாநில நிர்வாகிகள் பேச்சு வார்த்தையில் பங்கேற்க உள்ளனர்.

    பேச்சுவார்த்தை முடிவு ஒருபக்கம் இருந்தாலும் அதுவரை வேலை நிறுத்தம் தொடர்பான பிரச்சாரத்தை தொடர்ந்து நடத்த வேண்டும் என்று சங்க நிர்வாகிகளுக்கு தெரியப்படுத்தி உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #TASMAC

    ×